கோலாலம்புர், ஜூன் 13-
பாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் விலக உள்ளதாக அண்மைய காலமாக ஆருடங்கள் பரவி வருகின்றன.
அவருக்கு மாற்றாக வேறொருவரைத் தலைவராக்குவதற்கான பேச்சுகளும் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அத்தகவலில் உண்மையில்லை என பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
ஹாடி அவாங்கின் சேவை பாஸ் கட்சிக்கு மட்டுமல்ல. இஸ்லாமிய உலகிற்கும் இன்னும் தேவைப்படுகின்றது.
ஹாடி அவாங் தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும். கட்சி உறுப்பினர்களும் அதைத்தான் விரும்புவார்கள் என தாம் கருதுவதாக துவான் இப்ராஹிம் கூறினார்.
பல இஸ்லாமிய இயக்கங்களுடனான சந்திப்புகளில், ஹாடி அவாங் தொடர்ந்து அவரது கருத்துக்களையும் பங்களிப்புகளையும் வழங்குவதோடு இஸ்லாமிய உலகின் ஒற்றுமைக்கான சிந்தனைகளை வழங்க வேண்டும் என பலர் தம்மிடம் வலியுறுத்தியிருந்ததாகவும் துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.


