Homeகுற்றவியல்உப்சி விபத்து; பேருந்தின் டயர், பிரேக்கில் பிரச்சனை இல்லை! - அந்தோணி லோக்

உப்சி விபத்து; பேருந்தின் டயர், பிரேக்கில் பிரச்சனை இல்லை! – அந்தோணி லோக்

கெரிக், ஜூன் 14-

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 53ஆவது கிலோமீட்டரில், கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்தில் பயணித்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் – உப்சியின் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அந்த விபத்திற்கு பேருந்தின் பிரேக் அல்லது டயர் போன்ற இயந்திரக் கோளாறுகள் காரணமாக இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்பது தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அந்த விபத்திற்கு ஓட்டுநர், பயணித்த பாதையின் நிலை போன்ற பிற காரணங்கள் இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

கணினிமய வாகன ஆய்வு மையம் – (புஸ்பகோம்) தயாரித்த தொடக்கக்கட்ட தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

புஸ்பகோம் வழங்கிய ஆரம்ப தொழில்நுட்ப அறிக்கையின்படி, பேருந்தின் பிரேக் அமைப்பு, பிரேக் லைனிங்குகள் முதலானவை நல்ல நிலையில் உள்ளன.

பிரேக் டிரம்களில் எந்தவித ஒழுங்கின்மையும் அல்லது பிரேக் லைனிங்கில் மெலிந்த நிலையும் இல்லை. இந்த அம்சங்களில் இயந்திரக் கோளாறு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

ஆகவே, அவை விபத்திற்கு நேரடியான காரணமாக இருக்க முடியாது என அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

 

spot_img

latest articles

explore more