Homeசமூகம்ஊடகங்களின் இலக்கவியல் உருமாற்றத்திற்காக வெ. 30 மில்லியன் ஒதுக்கீடு! பிரதமர் அறிவிப்பு 

ஊடகங்களின் இலக்கவியல் உருமாற்றத்திற்காக வெ. 30 மில்லியன் ஒதுக்கீடு! பிரதமர் அறிவிப்பு 

கோலாலம்பூர், ஜூன் 14 –

இந்நாட்டில் ஊடக நிறுவனங்கள் இலக்கவியல் (டிஜிட்டல்) உருமாற்றத்தை முழு அளவில் அமல்படுத்தி மேம்பாடு காண ஏதுவாக அரசாங்கம் 30 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார் .

அதே வேளையில், இந்நிறுவனங்கள் உள்ளடக்க உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் இந்நிதி உதவும் என்று  தலைநகரில் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊடகவியலாளர்கள் நாள் (ஹவானா ) கொண்டாட்ட நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரை நிகழ்த்தியபோது குறிப்பிட்டார்.

இவ்விழா இன்று தலைநகர், உலக வர்த்தக மையம் (டபள்யூடிசி) மாநாட்டு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

ஊடகவியலாளர்கள் நடப்பு தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளும்படியும் பிரதமர் ஆலோசனை கூறினார்.

“தொடக்கக் கட்டமாக ஊடகவியல் நிறுவனங்களுக்காக மிகப் பெரிய நிதியை ஒதுக்கீடு செய்ய நான் இணக்கம் தெரிவித்தேன்” என்றார்.

ஊடக துறையினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மிகப்பெரிய நிதி இதுவாகும் என்றார் அவர்.

“ஊடகத்தின் கருப்பொருளாக உண்மையும் நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்” என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பட்சில் மற்றும் துணையமைச்சர் தியோ நி சிங் ஆகியோரும் வருகை புரிந்தனர்.

 

 

 

spot_img

latest articles

explore more