Homeஉலகம்மியன்மார் நெருக்கடியில் ஆசியானின் மெத்தனப் போக்கு :பிரதமர் வருத்தம்

மியன்மார் நெருக்கடியில் ஆசியானின் மெத்தனப் போக்கு :பிரதமர் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 19-

மியான்மாரில் தற்போது மோசமடைந்து வரும் நெருக்கடி மீது ஆசியான் அக்கறை காட்டாமல் இருப்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருத்தம் தெரிவித்தார்.

அந்நாட்டில் நிலைமை மோசமடைவதற்கு முன்பு ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அதே சமயம், மியான்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தாக்குதல் மலேசியா, தாய்லாந்து உட்பட பல அண்டை நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

மியான்மார் ஆசியான் அமைப்பின் ஓர் உறுப்பு நாடு. ஆகையால், அதன் நெருக்கடி நிலைக்கு எதிராக நாம் அவசியம் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அன்வார்.

இதை விடுத்து, இதர ஆசியான் உறுப்பு நாடுகள் மௌனம் காப்பது தவறு என்றார்.

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா மற்றும் பிற நாடுகளின் உதவிகளை வரவேற்றாலும் இது ஆசியான் அமைப்பின் கடமை என்று தலைநகரில் 38-ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசை கூட்டத்தின் கேள்வி-பதில் அமர்வின் போது பிரதமர் இவ்விதம் கருத்துரைத்தார்.

நெருக்கடியான இச்சமயத்தில் மியான்மாரை விட்டு வெளியேறிய சுமார் 2 லட்சம் பேர் தற்போது மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 

spot_img

latest articles

explore more