Homeசமூகம்எஸ்பிஎம் தேர்வு:10ஏ+, 10 ஏ பெற்றவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் நேரடி வாய்ப்பு! 

எஸ்பிஎம் தேர்வு:10ஏ+, 10 ஏ பெற்றவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் நேரடி வாய்ப்பு! 

கோலாலம்பூர், ஜூன் 24-

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ+, 10 ஏ பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயில நேரடி வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

ஆகையால், அனைத்து மாணவர்களுக்கும் இந்தச் சலுகை கிடைக்காது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம், ஏ-  பெற்ற மாணவர்களும் தகுதியுடையவர்களாக கருதப்படுகிறார்கள்.

எனினும் , அவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படமாட்டார்கள். மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் ஃபட்லினா.

மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களில் 86% பேர் எஸ்பிஎம் தேர்வில் 9 பாடங்களை எடுத்துள்ளனர்.

14% மாணவர்கள் மட்டுமே  இத்தேர்வில்10 பாடங்களை எடுத்துள்ளனர் என்று ஃபட்லினா குறிப்பிட்டார்.

இதன் பொருட்டு, எஸ்பிஎம் தேர்வில்10 பாடங்களை எடுத்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இன்று நடைபெற்ற எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கான விருதளிப்பு  விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  இதனைத் தெரிவித்தார் .

spot_img

latest articles

explore more