Homeமலேசியாநாட்டின் பணவீக்கம் மே மாதம் 1.2 விழுக்காடாகக் குறைவு! 

நாட்டின் பணவீக்கம் மே மாதம் 1.2 விழுக்காடாகக் குறைவு! 

கோலாலம்பூர், ஜூன் 24-

நாட்டின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் 1.2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 51 மாதங்களில் பதிவான மிகக் குறைந்த நிலை இது  என்று தேசிய புள்ளியல் துறை  அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது .

உலகம் முழுவதும் எண்ணெய் விலை குறைந்துவிட்ட நிலையில் மலேசியாவிலும் சில பொருட்களின் விலை அதிகம் உயரவில்லை என்று புள்ளியல் துறை கூறியது.

இதே நில தென் கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற  நாடுகளிலும் இதே நிலை நிலவியுள்ளதாக அத்துறை விவரித்தது.

உணவுப் பொருட்களின் விலை 2.1 விழுக்காடு உயர்ந்துள்ளபோதிலும்  ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதை விட  இது அதிகமாக இல்லை என்று அத்துறை கூறியது.

spot_img

latest articles

explore more