மலேசியத் தமிழ் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘தலேஜூ’ நாவலுக்கு, சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற 11ஆம் ஆண்டு படைப்பு சங்கமம் விருது விழாவில் ‘சிறந்த நாவல் விருது – 2026’ வழங்கப்பட்டது.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த கே. பாலமுருகன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
கொரோனா காலத்தில் மனிதர்கள் எதிர்கொண்ட தனிமை, பிரிவு, மரண அச்சம், பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்ப உறவுகளின் விரிசல்கள் உள்ளிட்ட வாழ்வியல் அனுபவங்களை ‘தலேஜூ’ நாவல் பதிவு செய்கிறது.
தமிழகத்தில் கிடைத்துள்ள இந்த விருது, கே. பாலமுருகனின் படைப்புப் பயணத்திற்கும் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
https://www.tiktok.com/@anegunnews/photo/7690894106414845205?is_from_webapp=1&sender_device=pc


