Homeவர்த்தகம்நாட்டில் தமிழ் மொழியின் மேன்மைக்கு டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் பங்களிப்பு...

நாட்டில் தமிழ் மொழியின் மேன்மைக்கு டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் பங்களிப்பு தொடரும்! டத்தோ பி.சகாதேவன்

கோலாலம்பூர், அக். 23-

இந்நாட்டில் தமிழ் மொழி தலைத்தோங்குவதற்கும், எதிர்கால சந்ததியினர் மத்தியில் அதன் தரம் தொடர்ந்து கட்டிக்காக்கப்படுதற்கும் டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் தொடர்ந்து தனது பங்களிப்பை ஆற்றி வரும் என்று தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவன் நம்பிக்கை தெரிவித்தார்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அதேவேளையில், தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் என்றும் நிலைத்திருப்பதற்கு இந்த இலக்கியப் போட்டிகள் துணைபுரியும் என்று தலைநகரில் நடைபெற்ற டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 34ஆவது இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது சகாதேவன் குறிப்பிட்டார்.

அவ்வகையில் நாடளாவிய நிலையில் உள்ள எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்றதாகவும் இவர்களில் சிறந்த படைப்பாளர்களுக்கு உரிய பரிசு தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

மரபுக் கவிதை, சிறுகதை(பொது),புதுக்கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதை (மாணவர் பிரிவு) ஆகிய 5 பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

வெற்றியாளர்களுக்கான
முதல் பரிசு RM2,500,
இரண்டாம் பரிசு RM1,750,
மூன்றாம் பரிசு RM1,250,
ஆறுதல் பரிசுகள் தலா RM500

34ஆவது இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு:

மரபுக் கவிதை வெற்றியாளர்கள்:

1. கவிஞர் சுங்கை ஜாவி சுப்ரமணியம்
2. குமார் துரைராஜு
3. மகிழன் ஜி.கணேசன்

ஆறுதல் பரிசு

பாவலர் கோவதன்
ஜாசின் தேவராஜன்
தமிழன்பன்

சிறுகதை (பொது) வெற்றியாளர்கள்:

1. கவிதா ராமசாமி
2. சுங்கைப்பட்டாணி சிவா
3. ராஜேஸ் ராமசாமி

ஆறுதல் பரிசு

உமா மதுபாலன்
மணிராமு
மணிமாறன் கோவிந்தராஜ்

புதுக்கவிதை வெற்றியாளர்கள்:
1. சுமசாமி
2. இளமாறன் நாகலிங்கம்
3. உதயகுமாரன் கந்தசாமி

ஆறுதல் பரிசு
நிர்மலா தேவி பன்னீர் செல்வம்
கு.ஆனந்தன்
லோகேஸ்வரி ஏழுமலை

கட்டுரை பிரிவு வெற்றியாளர்கள்:
1. சிவம் தமிழ்செல்வம்
2. உமாஷங்கரி புவனேஸ்வரன்
3. ஈஸ்வரி குணசேகரன்

ஆறுதல் பரிசு

குமுதா தங்கராசு
ஜோன்சன் மதலமுத்து
முனியாண்டி வரதன்

சிறுகதை (மாணவர் பிரிவு) வெற்றியாளர்கள்
1. யோகேஸ்வரன் சேது
2. துர்கேஸ்வரி தேவேந்திரன்
3. மோகனா தட்சணாமூர்த்தி

ஆறுதல் பரிசு
நவினியா ராஜா
சக்தி லோகேஸ்வரி ரவி
இரணியன் முரளிதாசன்

spot_img

latest articles

explore more