Homeவிளையாட்டுபார்சிலோனாவில் இணைந்தார் கோத்தின்ஹோ!

பார்சிலோனாவில் இணைந்தார் கோத்தின்ஹோ!

பார்சிலோனா, ஜன.7 –
ஸ்பெயினின் பார்சிலோனாவில் இணைய வேண்டும் என்ற லிவர்புல் மத்திய திடல் ஆட்டக்காரர் பிலிப்பே கோத்தின்ஹோவின் கனவு கடைசியில் நிறைவேறியுள்ளது. லிவர்புல் கிளப்பின் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் கோத்தின்ஹோ 16 கோடி ஈரோ டாலரில்  பார்சிலோனாவில் இணைந்துள்ளார். உலக கால்பந்து வரலாற்றில் அதிக விலைக் கொடுத்து  வாங்கப்பட்ட மூன்றாவது ஆட்டக்காரராக கோத்தின்ஹோ விளங்குகிறார்.
லிவர்புல் , பார்சிலோனா கால்பந்து கிளப்புகள் இந்த ஒப்பந்தத்தை உறுதிச் செய்துள்ளன. பார்சிலோனா கிளப்புடன் ஐந்தரை ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கோத்தின்ஹோ கையெழுத்திட்டுள்ளார். பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேற வேண்டும் என கோத்தின்ஹோ நினைத்தால் அவரின் ஒப்பந்தத்தின் விலை 40 கோடி ஈரோ டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கனத்த இதயத்துடன் கோத்தின்ஹோவை பார்சிலோனாவுக்கு விட்டு கொடுப்பதாக லிவர்புல் நிர்வாகி ஜூர்கன் குலோப் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் இணைய வேண்டும் என கடந்த ஜூலை மாதம் தொடங்கி கோத்தின்ஹோ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இனியும் அவரின் ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்பவில்லை என குலோப் தெரிவித்தார்.
இத்தாலியின் இண்டர் மிலான் கிளப்பில் இருந்து வெறும் 80 லட்சம் ஈரோ டாலரில் இணைந்த கோத்தின்ஹோ லிவர்புல் கிளப்பில் 54 கோல்களைப் போட்டிருக்கிறார்.
spot_img

latest articles

explore more