Homeவிளையாட்டுஸ்டோக் சிட்டி நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் மார்க் ஹியூஸ்!

ஸ்டோக் சிட்டி நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் மார்க் ஹியூஸ்!

லண்டன், ஜன. 7 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப்பான ஸ்டோக் சிட்டி, மார்க் ஹியூசை நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்டோக் சிட்டி 1 – 2 என்ற கோல்களில் கோவான்ட்ரி சிட்டி அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து மார்க் ஹியூஸ் நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஸ்டோக் சிட்டியை வழிநடத்திய மார்க் ஹியூசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஸ்டோக் சிட்டி தனது பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை பிரீமியர் லீக் போட்டியில் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ள ஸ்டோக் சிட்டி இந்த பருவத்தில் லீக் போட்டியில் 18 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிரீமியர் லீக் ஆட்டத்தில் செல்சியிடம் 0- 5 என்ற கோல்களில் ஸ்டோக் சிட்டி படுதோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் மார்க் ஹியூஸ் பலவீனமான அணியை களத்தில் இறக்கினார். அதனைத் தொடர்ந்து நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிராக அதே அணியை அவர் பயன்படுத்தியதை அடுத்து 0 – 1 என்ற கோலில் தோல்வி கண்டது. இந்த பருவத்தில் பிரீமியர் லீக் போட்டியில் நடைபெற்ற 22 ஆட்டங்களில் ஸ்டோக் சிட்டி ஐந்து ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆறு லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டது.

spot_img

latest articles

explore more