Homeமலேசியாஅன்வாருக்கு ஆரத்தி எடுத்தால் நியாயம்; ரஜினிக்கு எடுத்தால் குற்றமா?

அன்வாருக்கு ஆரத்தி எடுத்தால் நியாயம்; ரஜினிக்கு எடுத்தால் குற்றமா?

கோலாலம்பூர், ஜன. 8-
தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆரத்தி எடுத்து நல்வரவேற்பு நல்கியதை ‘நெட்டிஸன்கள் கடுமையாக விமிர்சித்திருந்தனர். தமிழ் நாழிதழ்களும் முதல் பக்கச் செய்தியாகப் பிரசுரித்திருந்தன.

ரஜினிக்கு ஆரத்தி வரவேற்பு வழங்கியதை ‘இது என்ன கேலிக்கூத்து? என விமர்சித்தவர்களுக்கு, ம.இ.கா. தேசிய உதவித் தலைவரும் மேலவை உறுப்பினருமான செனட்டர் டத்தோ டி.மோகன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசிய அந்த ஒலிப்பதிவு புலனங்களில் பரவி வருகிறது. நடிகர் என்பதையும் கடந்து, ரஜினி ஓர் ஆன்மீகவாதி. என் நண்பரும் கூட! அவருக்கு ஆரத்தி எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது? அப்படியானால் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆரத்தி எடுத்தார்களே… அது பரவாயில்லையா? என டத்தோ டி.மோகன் கேள்வி எழுப்பினார்.

நான்தான் ‘சிவாஜி தி போஸ் என தம்பட்டம் அடித்துக் கொண்டு பொதுத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகளை வேட்டையாடியவர் அன்வார்! ‘ஒரிஜினல் சிவாஜி தி போஸ் ரஜினி மட்டும்தான்! ஆனாலும், அந்தப் போலி நடிகர் பின்னாலும் சில இந்தியர்கள் சுற்றினார்கள். பொன்னாடை, பூமாலை, தலைப்பாகை அணிவித்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தார்கள். அந்த அன்வார் இந்தியர்களுக்குச் செய்தது என்ன? எனும் கேள்வியானது டத்தோ டி.மோகனின் கேள்விக் கனையோடு தொடர்கிறது!

ரஜினி ஓர் அனைத்துலகப் பிரபலம். அவரின் திரைப்பட வசனங்கள், காட்சிகள், தத்துவங்கள், பாடல்கள் என பல அம்சங்கள் நம் அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் ஒற்றிக் கொண்டுதான் வருகிறது. மலேசிய ரசிகர்களைச் சந்திக்க தலைநகர் வந்த அவரை, மரியாதையோடு வரவேற்று – உபசரித்து – நிறைவாக வழி அனுப்பி வைப்பது நம் பண்பாடு. அவருக்கு அத்தகைய பாரம்பரிய உபசரிப்பை வழங்கியதில் அப்படி என்ன குற்றம் நேர்ந்து விட்டது என டத்தோ டி.மோகனின் பதிலடியோடு இந்த வினாவும் முன்வைக்கப்படுகிறது.

மலேசியக் கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யவில்லையா? ரஜினிக்கு ஆரத்தி எடுத்த ஏற்பாட்டுக் குழுவோடு இருந்த டத்தோ டி.மோகன், மலேசிய இந்தியக் கலைஞர்களுக்கு என்ன செய்து விட்டார் என ‘அந்த விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நாட்டு கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததில் எனது பங்கு அதிகம்! சென்னையில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் மலேசியத் தமிழ்ப்படங்களை முதன் முதலாக இடம்பெறச் செய்தது நான்தான். மலேசியக் கலைஞர்களுக்கும் தமிழகக் கலைஞர்களுக்கும் இடையிலான தொடர்பை வலுவாக்கிக் கொடுத்துள்ளேன்.

நட்சத்திர கலைவிழாவில் ஒன்று திரண்ட 250க்கும் மேற்பட்ட கோலிவுட் நடிகர் நடிகைகள் மத்தியில் மலேசிய இந்திய கலைஞர்களும் தங்களின் படைப்புகளை அரங்கேற்ற வழிவகுத்துக் கொடுத்துள்ளேன். தவிர, மலேசியக் கலைஞர்களின் மேன்மைக்காக இன்னும் பல பணிகளைச் செய்துக் கொடுத்துள்ளேன். இதனை அறியாது வாயச்சவாடல் வேண்டாம் சகோதரர்களே என்று டத்தோ டி.மோகன் பதிலுரைத்தார்.

எல்லா விஷயங்களையும் குறையாகப் பார்க்காதீர்கள். அவற்றிலுள்ள நன்மைகளையும் பாருங்கள். மனசாட்சியோடு பேசுங்கள். பிறரை குறைக் கூறும் உங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் ஒரு தடவை மீள்பார்வை செய்து கொள்ளுங்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, நாளை மறுநாள் புதன்கிழமை, பூச்சோங் ஒன் சிட்டி மாலிலிருந்து பேஸ்புக் நட்பு ஊடகத்தின் வாயிலாக தாம் நேரலையாக பேசவிருப்பதாகவும், தம்மிடம் கேள்வி கேட்க விரும்புகின்றவர்கள் தாராளமாகக் கேட்கலாம் என்று டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more