Homeகலை உலகம்ஹன்சிகா இது? அதிர்ச்சியில் திரையுலகம்!

ஹன்சிகா இது? அதிர்ச்சியில் திரையுலகம்!

சென்னை, மார்ச் 9-

ஹன்சிகா எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார் ஹன்சிகா. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் தற்போது முன்னணி வரிசையில் இடம்பிடிக்க தடுமாறி வருகிறார்.

முன்பு போன்று கை நிறைய படங்கள் இல்லை. கொழுக் மொழுக் ஹன்சிகா என்றாலே அவர் கொழுக் மொழுக் என்று இருந்தது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். குஷ்பு, ஜோதிகாவிற்கு பிறகு ஹன்சிகாதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

அவருக்கு அது தான் அழகும் கூட என்று ரசிகர்கள் கூறி வந்தனர். உடல் எடை ஹன்சிகா திடீர் என்று தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து கஷ்டப்பட்டு குறைத்தும் விட்டார். ஆனால் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஹன்சிகா கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் இந்த படத்தை பார்த்து இவர் ஹன்சிகாவே இல்லை என கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் மீண்டும் பழைய ஹன்சிகாவாக மாறிவிடுங்கள் என்று அன்பு கட்டளையிட்டுள்ளனர்.

spot_img

latest articles

explore more