மென்செஸ்டர், அக்.16-
மென்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பில் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க கேப்டன் வின்சென்ட் கொம்பானி விருப்பம் கொண்டுள்ளார். இந்த பருவத்தின் இறுதியில் 32 வயதுடைய வின்சென்ட் கொம்பானியின் ஒப்பந்தம் நிறைவுப் பெற விருக்கிறது.
அந்த ஒப்பந்தத்தை மென்செஸ்டர் சிட்டி நிர்வாகம் நீட்டிக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். 30 வயதைக் கடந்திருந்தாலும் இன்றும் தம்மால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவதாக அவர் சொன்னார். ஆரம்ப காலங்களில் வின்சென்ட் கொம்பானி அவ்வபோது காயம் அடைந்துள்ளார்.
இதனால், பெல்ஜியம் பயிற்றுனர் ரோபேர்ட்டோ மார்டினேசும், மென்செஸ்டர் சிட்டி பயிற்றுனர் பெப் குவார்டியோலாவும், வின்சென்ட் கொம்பானியின் நிலையைத் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


