Homeமலேசியாகல்விமலேசிய இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசின் கல்வி உபகாரச் சம்பளம்

மலேசிய இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசின் கல்வி உபகாரச் சம்பளம்

கோலாலம்பூர், ஆக.24-
மலேசிய இந்திய மாணவர்களுக்கு 2017-2018 ஆண்டுக்கான கல்வி உபகாரச் சம்பளத்தை இந்திய அரசு வழங்கவிருக்கிறது. இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் நிபுணத்துவம் மற்றும் பொதுவான துறைகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மலேசியாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான இந்த உபகாரச் சம்பளத் திட்டத்தில் 17 முதல் 21 வயதிற்கு உட்பட்ட மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், பிற நாடுகளைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் முதலானோர் விண்ணப்பிக்க முடியும்.

இந்த உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியாகும். இதற்கானத் தேர்வு, மெரிட் (merit) அடிப்படையில்தான் செய்யப்படும் என்பதால் நிர்ணயிக்கபட்ட ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தின் இணையதளமான ‘spdcindia.gov.in வாயிலாகத் தருவிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தேர்வு பெற்ற இந்திய மாணவர்களின் விபரங்கள் இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சினுடைய அகப்பக்கமான www.mea.gov.in இல் வெளியிடப்படும் என தமது அறிக்கையில் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

latest articles

explore more