சுங்கை பட்டாணி, திசம்பர் 7:-
இன்று உலக அளவிலான நிலையில் இயங்கலை வாயிலாக யோகா கலை விழா அரங்கேற்றம் நடைபெற்றது. அவ்விழாவில் மலேசியாவின் 10 யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்களின் சீடர்களுடன் இயங்கலை வாயிலாக கலந்து சிறப்பித்தனர்.
அவ்வகையில், சுங்கை பட்டாணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கெடா மாநில அலுவலகத்தில் பயிற்சி நடத்திவரும் யோக பாரதி அமுதா, முருகையா ஆகியோர் அவ்விழாவில் பங்கு பெற்று தங்களின் திறமைகளை அகிலத்தின் பார்வைக்குக் காட்டினர்.
அலுவலகத்தில் இருந்து அவர்கள் அந்த விழாவிற்குப் படைப்புகளைப் படைத்தனர். அவர்களின் படைப்புகளைக் கெளரவிக்கும் வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோ ஸ்ரீ R.S.தனேந்திரன் அவர்களும் கெடா மாநில மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் மதிப்புமிகு டத்தோ ஓ.ஜி.சண்முகம் அவர்களும் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர். பல ஆயிரம் உலக பார்வையாளர்கள் முன்னிலையில் ஐயா அவர்கள் சிறப்பாக உரையாற்றி படைப்பாளர்களையும் கெளரவித்தார்.


