Homeஅரசியல்பேரா அரசியல் நெருக்கடி : மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களின் கருத்துக்கு அன்வார் காத்திருப்பு

பேரா அரசியல் நெருக்கடி : மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களின் கருத்துக்கு அன்வார் காத்திருப்பு

ஈப்போ, திசம்பர் 7:-

பேரா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து புதிய மாநில முதல்வர் பரிந்துரை குறித்து எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இபிராகிம் அம்மாநில நம்பிக்கைக்ல் கூட்டணித் தலைவர்களிடமே ஒப்படைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்விவகாரம் தொடர்பாக இன்னும் கலந்து பேசவில்லை எனவும் (நம்பிக்கைக் கூட்டணியின்) மாநிலத் தலைவர்களே அதற்கானப் பரிந்துரையை முன்வைப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கைக் கூட்டணியின் (ஜ.செ.க., பி.கே.ஆர். அமானா) மாநிலத் தலைவர்களிடம் கலந்து பேசுவதற்கு முன் பேரா மாநிலத்தில் நடப்பவைகளைத் தான் கவனித்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

“முந்தைய முதல்வரின் திறமையின்மையைக் காட்டியதோடு அதற்கான நடவடிக்கையை (இதர சட்டமன்ற உறுப்பினர்கள்) எடுத்தாக வேண்டும். இது ஒரு நல்ல மாறுதலாகப் பார்க்கிறேன்”

என அன்வார் இபுராகிம் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more