கோலாலம்பூர், டிச. 8-
மலேசியாவில் ஆலயங்கள் உடைக்கப்பட்டது தொடர்கதையாகி வரும் சூழ்நிலையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறும் ”விழுதுகள் சமுதாயத்தின் குரல்” எனும் நிகழ்ச்சியில் கோவில் உடைப்பு யார் பொறுப்பு என்ற தலைப்பில் இன்று இரவு 9 மணிக்கு விவாதம் நடக்கவிருக்கிறது.
இதில் பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் மலேசிய இந்தியக் காங்கிரசின் உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி மோகனும் பங்கேற்கிறார்கள்.
இதன் காரணமாக மலேசிய இந்தியர்களின் கவனம் இந்த நிகழ்ச்சியின் பக்கம் திரும்பியிருக்கிறது.
பல ஆண்டு காலமாக நீடித்து வரும் கோவில்கள் உடைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது யாருடைய பொறுப்பு என்பதை விவாதிக்கும் அதே காலகட்டத்தில் உடைக்கப்படுவதற்கு யார் காரணம் என்பது குறித்து இருவரும் பேசுகிறார்கள். இதனை எவ்வாறு தீர்க முடியும் என்பது குறித்தும் தங்களின் கருத்துகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியை இளஞ்செழியன்- இளந்தமிழ் ஆகியோர் வழி நடத்துகிறார்கள்.
கெடா மாநிலத்தில் ராஜ முனீஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் விடைதேடவிருக்கின்றார்கள். இன்று இரவு 9 மணிக்கு விழுதுகள்.


