Homeஇந்தியா/ ஈழம்கேரளாவில் 5 மாவட்டங்களில் விறுவிறுப்புடன் தொடங்கிய முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

கேரளாவில் 5 மாவட்டங்களில் விறுவிறுப்புடன் தொடங்கிய முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

திருவனந்தபுரம், திசம்பர் 8:-

கேரளாவில் முதல்கட்டமாக திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கேரளாவில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக திருவனந்தபுரம், இடுக்கி, கொல்லம், பட்டினம்திட்டை, ஆலப்புழா உள்பட 5 மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் 7,271 வார்டுகளில் 24,582 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 5 மாவட்டங்களில் மொத்தம் 88 லட்சத்து 26 ஆயிரத்து 260 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்களில் 46 லட்சத்து 68 ஆயிரத்து 209 பேர் பெண் வாக்காளர்கள். 70 பேர் 3-ம் பாலினத்தவர். இதற்காக 11,225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 56 ஆயிரத்து 122 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்று வருகிறது.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு வாக்காளரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குசாவடிகளுக்கு உட்புறமும் வாக்காளர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கொரோனா பாதித்தவர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வருகின்ற 10ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் வருகின்ற 14ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் காலை முதல் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் ஆளும் இடது முன்னணி அரசு, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

– நன்றி : தினகரன்

spot_img

latest articles

explore more