கோலாலம்பூர் | 19/8/2021 :-
தேசிய மீட்சித் திட்டத்தின் முதற்கட்டத்தில் இருக்கும் மாநிலங்களில் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் நாளை முதல் (20/8/2021) உணவகத்தில் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று இடைக்காலப் பிரதமர் அறிவித்த தளர்வுகளை அனுபவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளத் தகுதிகள் :
அ. Pfizer, AstraZeneca, Sinovac போன்ற இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசிக்குப் பிறகு 14 நாட்கள் கழித்து இந்தத் தளர்வுகளை அனுபவிக்கலாம்.
ஆ. Johnson & Johnson, CanSino போன்ற ஒற்றைத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து இந்தத் தளர்வுகளை அனுபவிக்கலாம்.
தேசிய மீட்சித் திட்டத்தின் முதற்கட்டத்தில் இருக்கும் மாநிலங்களுக்கு இடைக்காலப் பிரதமர் அறிவித்த இதரத் தளர்வுகள் :
1. தொடுதல் இல்லாத விளையாட்டு – வெளிப்புறப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு அனுமதி. (மாவட்டம் கடந்து சென்று மேற்கொள்ள அனுமதி இல்லை)
2. கூடல் இடைவெளியுடன் திறந்த வெளியில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
3. உணவகத்தில் அமர்ந்து உண்ண அனுமதி (விரிவானத் தகவல்கள்)
4. Club House இல் உள்ள உடைமாற்றும் அறை அல்லது குளியல் அறை திறக்கப்பட அனுமதி இல்லை.
5. மெதுவோட்டம், உடற்பயிற்சி, சைக்கிளோட்டம், skateboarding, மீன் பிடித்தல், அம்பெய்தல், மலையேறுதல், டென்னிஸ் (ஒற்றையர்), பூப்பந்து (ஒற்றையர்), கோல்ஃப் போன்ற தனியாள் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
6. கூடாரம் அமைக்கும் நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்டவர்கள் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கடுமையான எஸ்.ஓ.பி. விதிக்கப்படும்.
7. இரவுச் சந்தையும் வாரச் சந்தையும் இயங்க அனுமதி
8. வாடிக்கையாளர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகச் செலுத்திக் கொண்ட சான்றிதழை உறுதி செய்த பின்னரே அதிகாரத்துவத்தினர் இரவுச் சந்தை, வாரச் சந்தை வளாகத்தினுள் நுழைய அனுமதிக்க வேண்டும்.


