கோலாலம்பூர் | 21/8/2021:-
தேசிய மீட்சித் திட்டத்தின் முதற்கட்டத்தில் உள்ள மாநிலங்களில் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் வாகனத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லை என தேசியப் பாதுகாப்பு மன்றம் கூறியுள்ளது.
ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுக் கொண்டவர்களுக்கு முந்தைய எஸ்.ஓ.பி. இன்னும் நடப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pfizer, AstraZeneca, Sinovac போன்ற இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசிக்குப் பிறகு 14 நாட்கள் கழித்து இந்தத் தளர்வுவை அனுபவிக்கலாம்.
Johnson & Johnson, CanSino போன்ற ஒற்றைத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து இந்தத் தளர்வுவை அனுபவிக்கலாம்.
தேசிய மீட்சித் திட்டத்தின் முதற்கட்டத்தில் கெடா, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும், 10 கி.மீட்டருக்கும் மேல் பயணிக்க அனுமதிக்கப்பட்டாலும் அது அவர்கல் வசிக்கின்ற மாவட்டத்திற்குள்ளேயே இருப்பதஐ உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே, மாவட்ட எள்ளையைக் கடக்க இன்னும் அனுமதி அளிக்கப்பட வில்லை.
தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாநிலங்களுக்கு மாவட்ட எல்லையைக் கடக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும் மாநில எல்லையைக் கடக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


