சைபர்ஜெயா | 21/8/2021 :-
இங்குள்ள மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஆளிறங்குக் குழியில் இரு பணியாளர்கள் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை தீயணைப்பு – மீட்புப் படையினர் காப்பாற்ற முயற்சித்து வருகின்றனர்.
அதில் சிக்கிக் கொண்டுள்ள அவ்விருவரும் நச்சுக் காற்றைச் சுவாசித்ததால் மயக்கநிலையில் இருப்பதாக தீயணைப்பு – மீட்புப் பணியினரின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தமது தரப்பு பிற்பகல் 2.00 மணிக்கு இச்சம்பவம் குறித்து தகவல் பெற்றதாகவும் 11 நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலுய்ம், ஷா ஆலாம் தீயணைப்பு – மீட்புப் பணி அதிகாரி ஒருவர் இவர்களுக்கு உதவ சம்பவ இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


