Homeசமூகம்உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்:‘தையல் நாயகி’ விருது வழி 32 பேர் கௌரவிப்பு! 

உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்:‘தையல் நாயகி’ விருது வழி 32 பேர் கௌரவிப்பு! 

கோலாலம்பூர்,மே 11-தையல் துறையில் சிந்தும் வியர்வைக்கு மக்களிடையே அங்கீகாரமும் மதிப்பையும் பெற்றுத் தரும் முயற்சியாக முதன் முறையாக இத்துறையில் ஈடுபட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று தலைநகரில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விமர்சகன் மற்றும் எஸ்பி சாரா கேக் & டெய்லரிங் தோற்றுனர் எஸ்பி சரவணன் மற்றும் அவர்தம் குழுவினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடளாவிய நிலையில் தையல் தொழிலில்

ஈடுபட்டு வரும் 32 பேர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இன்று அன்னையர் தினமும் சேர்ந்துவிட்டதால் விருதளிப்புக்கு முன்பு தையல் தொழிலில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற திருமதி காளியம்மாள் தலைமையில் அனிச்சல் வெட்டி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது இவ்விழாவுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொருவரின் அனுபவத்தைத் தாங்கிய காணொளியுடன் விருதளிப்பு இனிதே தொடங்கியது.

இத்துறையில் தாங்கள் பெற்ற அனுபவத்திற்கும் சிந்தும் வியர்வைக்கும் இந்த விருது ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருப்பதாக இவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எஸ்.பி. சரவணனுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

இதுவரை இத்தகைய விருதைத் தாங்கள் பெற்றதில்லை என்றும் இந்த விருது தங்களை அடுத்த கட்ட நகர்வுக்குத் தயார்படுத்துவதாகவும் அவர்கள் உற்சாகம் பெருகக் கூறினர்.

நிகழ்ச்சி நெறியாளரின் தெளிவான மற்றும் விறுவிறுப்பான அறிவிப்பு விருதளிப்பு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

விருது பெறுவோருக்கு ஆதரவாக அவர்களின் குடும்பத்தினரும் இணைந்தது அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

டாக்டர் சத்தியவதி, பிரபல பாடகி திலா லஷ்மன், எஸ். பி. சரவணன் ஆகியோர் அனைவருக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

எஸ். கனகசுந்தரம் தையல் நாயகன் விருது பெற்ற வேளையில் இதர 31 பேர் தையல் நாயகி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இதுவரை தான் 7 விருது விழாக்களை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாகவும் தையல் துறையில் ஈடுபட்டவர்களுக்காக விருது விழா நடத்துவது இதுவே முதன் முறை என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் சரவணன் குறிப்பிட்டார்.

“அனைவரையும் கௌரவித்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். இதில் குறைகள் இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

spot_img

latest articles

explore more