தெலுக் இந்தான், மே 12-இன்று தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழாவில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 20,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பிரசாதம் பெற்றனர்.
150 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் இந்த ஆலயத்திற்கு இன்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் அலையென திரண்டனர்.
பால்குட ஊர்வலம், காவடி எடுத்தலை அடுத்து முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதணை நடத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறு வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் வர்த்தக சந்தைகளுக்கு ஊராட்சி மன்றம் வெறும் 400 ரிங்கிட்டை மட்டுமே கட்டணமாக விதித்தது குறிப்பிடத்தக்கது.

