Homeசமூகம்சமூகம்4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர்! 

4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர்! 

மோஸ்கோ, மே 14- நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணமாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்யா சென்றடைந்தார்.

வுனுகோவோ-2 விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் அன்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் அன்வார் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில்  மலேசிய பிரதமருக்கு  வழங்கப்படும் இதுவே முதன் முறையாகும்.

பிரதமர் அன்வாரை ரஷ்யாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சியோங் லூன் லாய் வரவேற்றார்.

அதே வேளையில், துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாக அன்வாரை வரவேற்றார்.

spot_img

latest articles

explore more