ஷா ஆலம், மே 13-சிலாங்கூர் மாநிலத்தில் பௌத்த, சீக்கிய, இந்து, கிறிஸ்துவ, தாவ் இனத்தவரிடையே ஐக்கியத்தையும், சுபீட்சத்தையும் பேணும் வகையில் சிறப்பு செயற்குழு வாயிலாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எங் ஸீ ஹான் தலைமையிலான இச்சிறப்பு செயற்குழு (லிமாஸ்) கூட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு சிறப்பு வருகை புரிந்த வேளையில் ஊராட்சி மன்ற செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் & மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (உபென்) துணை இயக்குநர் நூருல் அயன் மான் மெஸ்ரியும் கலந்து கொண்டார்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், புக்கிங் லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

சமயங்களுக்கு இடையே ஐக்கியம் தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதில் மாநில அரசாங்கம் கொண்ட கடப்பாட்டையே இவர்களின் வருகை பறைசாற்றியது.
மாவட்ட நில அலுவலகம், சிலாங்கூர் நில & கனிம அலுவலகம், பொதுப்பணி இலாகா, நகர் & புறநகர் திட்டமிடல் இலாகா,சிலாங்கூர்& கூட்டரசு நில & கனிம இலாகா ஆகியவையும் பங்கேற்றன.
மலேசிய இந்து சங்கம், மலேசிய குத்வாரா மன்றம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், பௌத்த மிஷனரி சங்கம்,கோலாலம்பூர்& சிலாங்கூர் மலேசிய பௌத்த சங்கம் மற்றும் மலேசிய ஃபோ குவாங் பௌத்த சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாமியர் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


