புத்ரா ஜெயா, மே 20- ஓர் அடையாளக் கார்டு பிரச்சினையைத் தீர்க்க தேசிய பதிவு இலாகாவிற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்ற காரணம் ஏற்க முடியாத ஒன்று என்று அமலாக்கத் துறையின் நேர்மைக்கான ஆணையம் (இஏஐசி) சாடியுள்ளது.
இந்தப் பிரச்சினையின் விசாரணையை மேற்கொண்ட குழுவின் மெத்தனப் போக்கானது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அந்த இலாகா எவ்விதமான பணி வழக்க நடைமுறையையும் (எஸ்ஒபி) பின்பற்றத் தவறியது பொதுச் சேவைத் துறையின் நற்சேவைக்கு இழுக்கைத் தேடித் தந்துள்ளது.
பிரச்சினை எதுவாக இருந்தாலும் மக்களுக்குச் சேவையை வழங்கும் தேசிய பதிவிலாகா ஏற்க முடியாத காரணங்களைக் கூறி கடமையிலிருந்து தப்பிக்கக் கூடாது என்றும் அந்த இலாகா இனிமேலும் இம்மாதிரியான மெத்தனப் போக்கை கைவிட்டு, துரிதமான, ஆக்கப்பூர்வமான சேவையை வழங்க உறுதி கொள்ள வேண்டுமென இஏஐசி வலியுறுத்தியுள்ளது.


