கோலாலம்பூர், மே 20-நான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நடைமுறையில் இருக்கும் 3ஆர் எனப்படும் இனம், சமயம் மற்றும் அரசக் கழகம் சம்பந்தமான உணர்ச்சிகரமான பிரச்சினைகளுக்கு விதிப்பட்டிருக்கும் தடைகளை உடனடியாக அகற்றுவேன் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் சூளுரைத்துள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி 100 வயதை எட்டும் மகாதீர், பிரச்சினைகளை மூடி மறைத்து, பேசுவதற்கும் கருத்தைக் கூறுவதற்கும் தடை விதிக்கும் கட்டுப்பாடு ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலென்றும் சாடினார்.
இன்று தமது புத்தகம் ஒன்றை வெளியிடும் நிகழ்ச்சியில் நாட்டில் எல்லாமே சரியாக இயங்குவதாகப் பொய்ப் பிரசாரம் செய்வதில் பயனேதும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.


