Homeஅரசியல்தேர்தல் முடிவால் ரபிஸியின் அரசியல் வாழ்வை சிதைக்க  இயலாது! இப்ராஹிம் சுஃபியான்

தேர்தல் முடிவால் ரபிஸியின் அரசியல் வாழ்வை சிதைக்க  இயலாது! இப்ராஹிம் சுஃபியான்

கோலாலம்பூர், மே 24-பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ரபிஸி ரம்லி தோற்றிருந்தாலும் அது அவரின் அரசியல் வாழ்வை எவ்வகையிலும் சிதைக்க முடியாது என்று மெர்டேக்கா செண்டரின் இப்ராஹிம் சுஃபியான் குறிப்பிட்டுள்ளார்.

போட்டியில் தோற்றாலும், மலேசிய அரசியலில் ரபிஸி முக்கிய நபராகவே திகழ்வார் என்றும் அவர் இன்னமும் செல்வாக்கோடும் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவோடும் இருப்பதாக கல்விமான் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்துள்ளார்.

ரபிஸியின் மக்களுடனான தொடர்புப் பிரச்சினை மற்றும் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு அவர் கட்டுப்படாமல் நடந்து கொண்டது போன்ற விவகாரங்கள் அவரை அன்வாருக்கு எதிரியாக உருவகப் படுத்தியதால்தான் அவர் தோற்றிருப்பதாகவும் ஆனால், அவரின் முதிர்ச்சி, தெளிவு, வியூகங்களை வகுக்கும் பாங்கு போன்றவை கட்சிக்கு இன்னும் தேவை என்றும் அவாங் அஸ்மான் பாவி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜேம்ஸ் சின் என்ற மற்றொரு கல்விமான் கூறும்போது, தோல்விக்குப் பின் ரபிஸியின் நடவடிக்கையே அவரின் எதிர்கால அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் என்றும் தமது அமைச்சர் பதவியைத் துறந்தால், அது அவருக்கு பெரும் நட்டத்தையே ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

spot_img

latest articles

explore more