Homeஅரசியல்பிரதமர் & ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி! டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

பிரதமர் & ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி! டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

கிள்ளான், மே 24-உற்சாகமூட்டும் தமது உரை வாயிலாக கட்சியில் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு தனக்கு உத்வேகத்தை ஏற்படுத்திய பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில், இத்தேர்தலில் தன் மீது நம்பிக்கை வைத்து தனக்கு முழு ஆதரவு வழங்கிய கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்.

நேற்று நடைபெற்ற கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் டாக்டர் குணராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேற்றகரமான மற்றும் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கான கட்சியின் இலக்கு மீது உறுப்பினர்கள் கொண்ட நம்பிக்கையையே இது காட்டுகிறது என்றார்.

சரிசமமான மற்றும் ஒன்றுபட்ட மலேசியாவை உருவாக்க பல்லின மக்களின் குரலை மேலோங்கச் செய்யும் நமது கடப்பாட்டையும் இது பறை சாற்றுகிறது .

“இத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்துவோம். இனம் மற்றும் பின்னனி பாராது மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றார் குணராஜ் .

 

spot_img

latest articles

explore more