Homeஅரசியல்கூறியப்படியே பொருளாதார அமைச்சர் பதவியைத் துறந்தார், ரபிஸி!

கூறியப்படியே பொருளாதார அமைச்சர் பதவியைத் துறந்தார், ரபிஸி!

கோலாலம்பூர், மே, 28-

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக, டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவரது அந்த விலகல், வருகின்ற ஜூன் 17ஆம் தேதி அமலுக்கு வருவதாக கூறிய அவர், இன்று தொடங்கி ஜூன் 16ஆம் தேதி வரையில், வருடாந்திர விடுமுறையில் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

பி.கே.ஆர். கட்சித் தேர்தலில், துணைத்தலைவர் பதவியைத் தற்காக்க தவறினால், தாம் வகித்துவரும் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக, டத்தோ ஸ்ரீ ரபிஸி இதற்கு முன்பு கூறியிருந்தார்.

அண்மையில் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில், கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த மகளான நூருல் இசாவிடம், டத்தோ ஸ்ரீ ரபிஸி தோல்வி கண்டார்.

அத்தோல்வி, அரசாங்க நிர்வாகத்தில் பி.கே.ஆரின் இலக்கை கொண்டு சேர்ப்பதில், கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இல்லாததைப் புலப்படுத்துகின்றது.

கட்சித் தேர்தலில், தோல்வி கண்ட ஒருவர், அரசாங்க நிர்வாகத்தில் புதிய தலைவர் இடம்பெறுவதற்கு வழிவிட வேண்டும். அந்த ஜனநாயகத்தைப் பின்பற்றும் விதமாக, தாம் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகும் முடிவெடுத்ததாகவும், பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துவிட்டதாகவும், டத்தோ ஸ்ரீ ரபிஸி, அவரது சமூக ஊடக பதிவில் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more