கோலாலம்பூர், மே, 28-
பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியின் பதவி விலகலைத் தொடர்ந்து, நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் இயற்கை வள -சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரபிஸி தரப்பைச் சேர்ந்த அவர், ஜூலை 4ஆம் தேதி, தமது பதவி விலகல் அமலுக்கு வருவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அது குறித்த கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.
ரபிஸியைப் போன்றே, அவரும் இடையிலுள்ள ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட நாள்களில், வருடாந்திர விடுமுறையில் செல்லவுள்ளதாக குறிப்பிட்டார்.
பி.கே.ஆரில், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தாம் வகித்துவந்த உதவித்தலைவர் பொறுப்பை, அண்மையக் கட்சித் தேர்தலில், தற்காக்கத் தவறியதால், தாம் அம்முடிவை எடுத்ததாக, நிக் நஸ்மி கூறினார்.


