Homeஅரசியல்ரபிஸியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை! –அனுவார் மூசா

ரபிஸியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை! –அனுவார் மூசா

கோலாலம்பூர், மே, 28-

“ஒரு கதவு மூடப்பட்டால், மற்றொரு கதவு திறந்திருக்கும்”

பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி விலகியுள்ளதை மேற்கோள்காட்டி, பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் தான் ஸ்ரீ அனுவார் மூசா அவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

ரபிஸியின் அம்முடிவு அதிர்ச்சிக்குரியது ஒன்றும் அல்ல. பி.கே.ஆரின் நடப்பு நிலவரங்களின் அடிப்படையில், அது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

சொந்த கட்சியினர் தம்மை நிராகரித்துள்ளதை ஏற்று, ரபிஸி பதவி விலகியுள்ளார்.

பதவி போவதால் மட்டும் ஒருவரின் போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது. மாறாக, கொண்டக் கொள்கையைத் தற்காப்பதே மிக முக்கியமாகும்.

ஒரு கதவு மூடப்பட்டால், மற்றொரு கதவு திறந்தே இருக்கும். ஆகையால், மூடப்பட்ட கதவுகளை இனி, தட்ட வேண்டியதில்லை. திறந்திருக்கும் கதவுகளை நாடி செல்வதே சிறந்தது என கூறிய தொடர்பு மற்றும் பல்லூடக முன்னாள் அமைச்சருமான அனுவார் மூசா, ரபிஸியின் போராட்டத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

 

spot_img

latest articles

explore more