Homeஅரசியல்ரபிஸியின் பதவிக்கு ரமணனை நியமிக்கலாம்! –அஹ்மாட் ஃபாட்லி

ரபிஸியின் பதவிக்கு ரமணனை நியமிக்கலாம்! –அஹ்மாட் ஃபாட்லி

கோலாலம்பூர், மே, 28-

மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில், நடப்பில் காலியாகியிருக்கும் இரு பதவிகளில் ஒன்றை நிரப்புவதற்கு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஆர்.ரமணன் தகுதியான நபராக உள்ளதாக, பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரி கருத்துரைத்தார்.

காலியாகியிருக்கும் அவ்விரு பொறுப்புகளுக்கு விரைந்து நியமனங்கள் செய்யப்பட வேண்டியுள்ள சூழலில், தாம் அப்பரிந்துரையை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பி.கே.ஆர். கட்சித் தேர்தலில், உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வுப் பெற்றவர்களில், டத்தோ ஸ்ரீ ரமணன் மட்டுமே புதிய முகம் ஆவார்.

முன்னதாக, பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியும், இயற்கைவளம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்பிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் விலகுவதாக இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more