கோலாலம்பூர், மே, 29-
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு, மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் பெயரைச் சூட்ட வேண்டுமென, ம.இ.கா பரிந்துரையை முன்வைத்துள்ளது.
அந்த அரங்கின் பெயரை, துன் அப்துல்லா அஹ்மட் படாவி தேசிய அரங்கம்” என மாற்றம் செய்யும் பரிந்துரையை, ம.இ.கா.உதவித்தலைவர் டத்தோ டி. முருகையா முன்வைத்தார்.
மலேசியாவின் 5-ஆவது பிரதமரான துன் அப்துல்லா அஹ்மட் படாவி அவர்களின் நினைவாக அப்பெயர் சூட்டப்பட வேண்டும் என்றாரவர்.
பக் லாஹ் என அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த துன் அப்துல்லா, ஒரு மிகுந்த பணிவும், நேர்மையும் கொண்ட தேசியத் தலைவர். அவரின் ஆட்சிக் காலம் மிதவாதம், நல்லாட்சி மற்றும் மத உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது என கூறிய டத்தோ டி.முருகையா, அவருடைய முக்கியப் பங்களிப்புகளைப் பின்வருமாறு பட்டியலிட்டார்.
1. மலேசியாவின் 5-ஆவது பிரதமர் (2003–2009) – துன் மகாதீர் முகமட் அவர்களை தொடர்ந்து, அமைதியான மற்றும் மக்களுடன் நெருக்கமான ஆட்சியைக் கொண்டுவந்தார்.
2. இஸ்லாம் ஹதாரி கொள்கையை அறிமுகப்படுத்தினார் – மத சீர்திருத்தத்துக்கு உதவும், முல்டி-ரேசிய அரசமைப்புக்கு ஏற்பவாக இருந்தது.
3. நேர்மையான நிர்வாகத்தை வலுப்படுத்தினார் – மலேசிய நேர்மைக் கழகம் மற்றும் ஊழல் தடுப்பு முகமை (BPR) ஆகியவற்றை வளர்த்தார்.
4. கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை முன்னேற்றினார் – தொழில்நுட்பக் கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை ஊக்குவித்தார்.
5. விலைகுறைந்த விவசாயத்தை வணிகமாக மாற்ற முயற்சி செய்தார் – “Agriculture as Business” கொள்கையை ஏற்படுத்தினார்.
6. மண்டல பொருளாதார வளர்ச்சி திட்டங்களை தொடங்கினார் – இச்கந்தர் மலேசியா, NCER, ECER, SCORE போன்றவை.
7. கல்வி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர், உள்நாட்டு அமைச்சர், துணைப் பிரதமர் மற்றும் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
இந்த அரங்குக்கு அவரது பெயரை வழங்குவது, அவரது சேவையை மதிக்கும் ஒரு தேசிய அஞ்சலாகவும், எதிர்கால தலைமுறைக்கு ஒரு சிந்தனையாகவும் அமையும்.
அரசாங்கம், குறிப்பாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சும், மத்திய அமைச்சரவையும் இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்வதாக, டத்தோ டி. முருகையா அறிக்கையொன்றில் கேட்டுக்கொண்டார்.


