Homeஅரசியல்அன்வார் மீதான ஆதரவை மீட்டுக்கொள்ளவில்லை. பி.கே.ஆர் எம்.பி திட்டவட்டம்

அன்வார் மீதான ஆதரவை மீட்டுக்கொள்ளவில்லை. பி.கே.ஆர் எம்.பி திட்டவட்டம்

கோலாலம்பூர், மே, 29-
பி.கே.ஆரின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஆதரவை, அக்கட்சியைச் சேர்ந்த 11 பேர் மீட்டுக்கொண்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.

பி.கே.ஆரைச் சேர்ந்த இருவர் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து நேற்று விலகியதை அடுத்து அத்தகவல் பரவி வருகின்றது.

இந்நிலையில், ஆதரவை மீட்டுக்கொண்டதாக கூறப்படுப்பவர்களில் ஒருவரான பி.கே.ஆரின் உதவித்தலைவரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரான சாங் லி காங், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ரபிஸி ரம்லியும் நிக் நஸ்மியும் ஒழுக்கத்தையும் ஜனநாயக உத்வேகத்தைக் காக்க வேண்டி, அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளனர். அவ்விவகாரத்தில் இதர தரப்பினர் குளிர்க்காயக்கூடாது என தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினருமான சாங் லி காங் அவரது பேஸ்புக் பதிவில் வலியறுத்தினார்.

மேலும், வாட்சாப் மற்றும் பேஸ்புக்கில், பரவலாகிவரும் வலைப்பதிவாளர் பாப்பாகோமோ என்றழைக்கப்படும் முஹம்மட் அஸ்ரி வான் டெரிஸின் பதிவை பகிர்ந்த அவர், அவை பொய்யானவை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, பாப்பாகோமோவின் பதிவில், ரபிஸி, நிக் நஸ்மி உட்பட பி.கே.ஆரைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்வாருக்கான ஆதரவை மீட்டுக்கொள்வதாகவும் இம்மாதம் 30ஆம் தேதி, அது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

spot_img

latest articles

explore more