Homeகலை உலகம்நடிகர் ராஜேஷ் காலமானார்.

நடிகர் ராஜேஷ் காலமானார்.

சென்னை, மே, 29-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75, சென்னையில் இன்று காலமானார்.

இன்று காலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், பாதி வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ஆம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்த ராஜேஷ், பள்ளி ஆசிரியர் பணியை துறந்து, சினிமாவில் நடித்தார்.

1974ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். வெள்ளித் திரையில் அவர் அறிமுகமான முதல் படம் இது. கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.இவரது மனைவி ஜோன் சில்வியா ஏற்கனவே இறந்துவிட்டார். திவ்யா, தீபக் என்ற ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

spot_img

latest articles

explore more