கோலாலம்பூர், மே, 29-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நடப்பு மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில் தாம் இடம்பெறவிருப்பதாக கூறப்படுவதை, முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் திட்டவட்டமாக மறுத்தார்.
தாம் சார்ந்த பல்வேறு வணிகங்களும் மேற்கொண்டுவரும் திட்டங்களும் உள்ளன. அதிலேயே, தமது முழு கவனமும் உள்ளது.
அதில் தாம் பெருமகிழ்ச்சியுடன் உள்ளதாக கூறிய கைரி, இவ்வாண்டு இறுதிவரையில், மீண்டும் அரசியலுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என செய்தியாளர்களிடம் கூறினார்.
நடப்பு அமைச்சரவையில் பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியும் இயற்கைவள நீடித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹ்மாட் விலகியதை அடுத்து அவ்விரு பொறுப்புகள் காலியாகியுள்ளன.
அவற்றில், ஒரு பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தால், ஏற்பீர்களா? எனும் செய்தியாளர்களின் வினவலுக்கு, கைரி அந்த பதிலை வழங்கினார்.


