Homeகுற்றவியல்சிறப்பு உத்தரவு தொடர்பில் எழுவர் இன்னும் ஒப்புதல் கடிதம் கொடுக்கவில்லை! - டான்ஸ்ரீ ஷாபி 

சிறப்பு உத்தரவு தொடர்பில் எழுவர் இன்னும் ஒப்புதல் கடிதம் கொடுக்கவில்லை! – டான்ஸ்ரீ ஷாபி 

கோலாலம்பூர், மே 29-

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு பேரரசரால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் ‘அடெண்டம் ‘எனப்படும் சிறப்பு உத்தரவை உறுதிப்படுத்த குறிப்பிட்ட எழுவர் இன்னமும் தமக்கு ஒப்புதல் கடிதம் கொடுக்கவில்லை என்று வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.

முன்னாள் சட்டத்துறை தலைவர் தெரிருடின் சாலே, உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன், சட்டத்துறைத் தலைவர் அஸாலினா ஒத்மான் சாலே, சிறை துறை ஆணையர், பிரதமர் துறை அலுவலகம், துணைப் பிரதமர்கள் ஆகியோருக்கு இது சம்பந்தமாகக் கடிதம் அனுப்பியதாகவும் அதில் ஒருவர் கூட கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தால் நஜிப்பிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை வீட்டில் அனுபவிக்க வேண்டுமென்ற கடிதம் இருப்பதாகப் பதிலளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

 

spot_img

latest articles

explore more