கூச்சிங், மே 29-சரவாக் அமைச்சர்கள் வெளிநாடு சென்று முதலீட்டை அதிகரிக்க 100 மில்லியன் வெள்ளியை மாநில சட்டமன்றம் எந்தவொரு காரணமும் தகுந்த விளக்கமுமின்றி அங்கீகரித்துள்ளது குறித்து படுங்கான் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சோங் சியாங் ஜென் அதிர்ச்சி தெரிவித்தார்.
கூட்டரசு அமைச்சர்கள் அதே காரணத்திற்காக வெளிநாடு செல்ல வெறும் 44 மில்லியன் வெள்ளி செலவாகியிருக்கும் நிலையில், சரவாக் அமைச்சர்களுக்கு 100 மில்லியன் வெள்ளி என்பது தேவையற்ற செலவு என அவர் சாடியுள்ளார்.
கடந்தாண்டு சரவாக்கிற்கு வெறும் 14.12 மில்லியன் வெள்ளி அந்நிய முதலீடு மட்டுமே வந்துள்ள நிலையில், கூட்டரசு நிலையில் மொத்தம் 378.5 மில்லியன் வெள்ளி முதலீடு வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.


