Homeசமூகம்விரைவு பஸ்-கார் மோதல்:மூவர் மரணம்

விரைவு பஸ்-கார் மோதல்:மூவர் மரணம்

கோல கிராய், மே 30-

பெரோடுவா மைவி-விரைவு பஸ் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஓர் ஆடவர் , இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம், இங்குள்ள கம்போங் சுங்கை சாம், ஜாலான் கோல கிராய்-குவா மூசாங் சாலையில் இன்று நடந்தது.

இந்த விபத்து தொடர்பில் காலை மணி 11.20க்கு தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பேச்சாளர் கூறினார்.

“ பெரோடுவா மைவி காரில் சிக்கிக் கொண்ட ஓர் ஆடவரும் இரு பெண்களும் உயிரிழந்துவிட்டதாக நம்பப்பட்டது.இவ்விவகாரத்தை போலீசாரிடம் நாங்கள் ஒப்படைத்துவிட்டோம்” என்றார் அவர்.

 

 

spot_img

latest articles

explore more