Homeஅரசியல்அடுத்தக்கட்ட நகர்வை, உரிய நேரத்தில் அறிவிப்பேன்! டத்தோ ஸ்ரீ ரபிஸி

அடுத்தக்கட்ட நகர்வை, உரிய நேரத்தில் அறிவிப்பேன்! டத்தோ ஸ்ரீ ரபிஸி

கோலாலம்பூர், மே, 30-
பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை வழங்கியுள்ள டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, அவரது அடுத்தக்கட்ட நகர்வை முடிவு செய்துவிட்டதற்கான ஆருடத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆயினும், அது குறித்த மேலதிக தகவலை அவர் வெளியிடவில்லை.

உரிய நேரம் வரும்போது, அதனை தெரிவிப்பதாக கூறிய பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரபிஸி, அதுவரையில்,
புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுவது உட்பட அனைத்து தரப்பும் நிதானத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பி.கே.ஆர். கட்சித் தேர்தலில், துணைத்தலைவர் பொறுப்பை தற்காக்கத் தவறியதை அடுத்து, டத்தோ ஸ்ரீ ரபிஸி, பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.

spot_img

latest articles

explore more