Homeஅரசியல்அம்னோவிலிருந்து விலகி, பி.கே.ஆரில் இணைவதாக, தெங்கு ஸப்ருல் அறிவிப்பு

அம்னோவிலிருந்து விலகி, பி.கே.ஆரில் இணைவதாக, தெங்கு ஸப்ருல் அறிவிப்பு

கோலாலம்பூர், மே, 30-
அம்னோ உச்சமன்றம், கோத்தா ராஜா தொகுதி தலைவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார்.

தமது அம்முடிவு எளிதானது அல்ல. அம்முடிவை எடுப்பதற்கு முன்னர் அம்னோ தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி, அக்கட்சியிலுள்ள நண்பர்கள் முதலானோருடன் நன்கு கலந்தாலோசித்து எடுத்ததாக, முதலீட்டு-வர்த்தக-தொழில் அமைச்சருமான அவர் கூறினார்.

1997ஆம் ஆண்டிலிருந்து அம்னோவில் இருந்துவரும் தாம், நீண்டக்காலமாக தீர யோசித்தும் பல்வேறு காரணங்களை ஆராய்ந்தும் அம்முடிவை எடுத்ததாக, டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

அம்னோவிலிருந்து விலகும் அவர், அடுத்து பி.கே.ஆர் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளார். அது குறித்து அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்துவிட்டதாகவும், அக்கட்சியின் வழக்கமான விண்ணப்ப நடைமுறையை பின்பற்றி, அதில் உறுப்பினராக இணையவிருப்பதாகவும் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் அப்பதிவில் கூறினார்.

spot_img

latest articles

explore more