பெட்டாலிங் ஜெயா, மே 31-பிகேஆரில் இணைவதற்காக அம்னோவை விட்டு விலகியிருக்கும் செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருலின் செயல் கட்சிக்கு இழைக்கும் துரோகமாகும் என்று கெடா அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஷைஃபுல் ஹஸிஸி ஜைனோல் அபிடின் சாடினார்.
முதலீடு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சருமான தெங்கு ஸப்ருல் நேர்மையுடையவராக இருப்பாரேயானால் தமது அமைச்சர் பதவியை அவர் துறக்க வேண்டும் என்று ஷைஃபுல் ஹஸிஸி கேட்டுக் கொண்டார்.
“தெங்கு ஸப்ருல் அம்னோ கோட்டாவில் முழு அமைச்சராக நியமிக்கப்பட்டவர். கட்சியில் இதுபோன்ற முதல் வகுப்பு சலுகைகளை எல்லாம் அனுபவித்துவிட்டு கட்சியைவிட்டு விலகுவதாக அவர் செய்திருக்கும் முடிவை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார் ஷைஃபுல் ஹஸிஸி.


