கோலாலம்பூர், மே, 31-
அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆர். கட்சியில் இணையும் முடிவெடுத்துவிட்ட செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸ், அம்னோ சார்பில் அவர் வகித்துவரும் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.
அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே அந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், கட்சி அழைக்காமல் அம்னோவில் இணைந்திருந்த டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல், தற்போது, அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது அம்னோ உறுப்பினர்களை அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கும் என்றார்.
மேலும், பி.கே.ஆர்.வினர் தெங்கு ஸப்ருலை, அவர்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்னோ – பி.கே.ஆர். இடையிலான தோழமை எத்துணை நேர்மையானது என்பதற்கு ஆதாரமாக, அது இருக்குமென, டாக்டர் அக்மால் சாலே சூசகமாக சாடினார்.


