பண்டான், ஜூன் 3-
சிலாங்கூர் பிபிபி மகளிர் மற்றும் பண்டான் பிபிபி மகளிர் அணியினரின் அன்னையர் தின கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பண்டான் பிரிவு அம்னோவின் தலைவர் டத்தோ ஜமாலுதீன் ரோபா மற்றும் அவரது குழுவினரின் வருகை விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
100க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் அதிர்ஷ்டக் குலுக்கல், ஆடை அலங்கார போட்டி மற்றும் தாய்மார்களுக்கான பாராட்டு அங்கம் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சமூகத்தில் முக்கிய பிரிவினராக இருக்கும் தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் அன்பைப் போற்றுவதற்காக இந்த அன்னையர் தின கொண்டாட்டத்தை சிலாங்கூர் மற்றும் பண்டான் பிபிபி மகளிர் பிரிவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
இந்தக் கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில பிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரனின் பிரதிநிதியாக சிலாங்கூர் மாநில பிபிபி துணைத் தலைவர் நந்தா கலந்து கொண்டார்.





