Homeகுற்றவியல்அன்வார் மீதான யூசோஃப் ராவ்தரின் சிவில் வழக்குக்கு இடைக்காலத் தடை!

அன்வார் மீதான யூசோஃப் ராவ்தரின் சிவில் வழக்குக்கு இடைக்காலத் தடை!

கோலாலம்பூர், ஜூன் 10-

2018ஆம் ஆண்டில் தம்மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவரது முன்னாள் உதவி ஆய்வாளர் யூசோஃப் ராவ்தர் தொடுத்திருந்த சிவில் வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பிரதமரின் முழு இடைநிறுத்த கோரிக்கை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, அந்த சிவில் வழக்கை இடைநிறுத்துவதற்கு டத்தோ ஸ்ரீ அன்வார் செய்திருந்த கோரிக்கையை ஏற்று மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, அந்த உத்தரவை வழங்கியது.

சிவில் வழக்கை முழுமையாக இடைநிறுத்தும் டத்தோ ஸ்ரீ அன்வாரின் கோரிக்கை தொடர்பான விசாரணை, ஜூலை 21 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி சுபாங் லியான், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக கூறினார்.

இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பிறகு, 1964 ஆம் ஆண்டு நீதிமன்றங்கள் சட்டத்தின் பிரிவு 44-இன் கீழ், மனுதாரரின் இடைநிறுத்த கோரிக்கையை ஏற்று, இடைநிறுத்த கோரிக்கையின் இறுதி முடிவு கிடைக்கும்வரை இடைக்கால உத்தரவை வெளியிடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்.

எனவே, மனுதாரரின் இடைநிறுத்த கோரிக்கையின் இறுதி முடிவு வரை, உயர் நீதிமன்றத்தில் முழு விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு இடைக்கால உத்தரவை இதன் மூலம் வெளியிடுவதாக, அவர் தமது தீர்ப்பில் கூறினார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, டத்தோ ஸ்ரீ அன்வாரின் கோரிக்கை நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் வரை, இந்த திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்ட முழு விசாரணை உட்பட சிவில் வழக்கு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுகின்றது

spot_img

latest articles

explore more