Homeசமூகம்பேருந்து ஓட்டுநருக்கு நிலுவையில் 18 குற்ற சம்மன்கள்! 

பேருந்து ஓட்டுநருக்கு நிலுவையில் 18 குற்ற சம்மன்கள்! 

கோலாலம்பூர் , ஜூன் 10- கிரிக்கில் நடந்த பேருந்து விபத்திற்குக் காரணமான அதன் ஓட்டுநருக்கு 18 போக்குவரத்து சம்மன்கள் நிலுவையில் உள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து இயக்குநர் யுஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

அந்த விபத்தில் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (உப்சி) மாணவர்கள் 15 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பந்தப்பட்ட பேருந்தில் பயணிகளுக்கான இருக்கையில் வார்ப்பட்டை இல்லையென்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

 

spot_img

latest articles

explore more