Homeகுற்றவியல்ஒருவரின் மை கார்டை கேட்பதும் ஸ்கேன் செய்வதும் சட்டப்படி குற்றமாகும்! 

ஒருவரின் மை கார்டை கேட்பதும் ஸ்கேன் செய்வதும் சட்டப்படி குற்றமாகும்! 

கோலாலம்பூர், ஜூன் 10- நிறுவனங்களில் பணியாற்றும் பாதுகாவலர்கள் பொதுமக்களின் மை கார்டுகளைக் கேட்பதும் அதனைப் படியெடுப்பதற்கும் (ஸ்கேன்) அதிகாரம் தரப்படவில்லை என்று தேசிய பதிவிலாகா அறிவித்துள்ளது.

அண்மைய காலமாக பாதுகாவலர்களின் அடாவடித்தனம் பற்றி பொதுமக்களின் புகார்களை அடுத்து, இந்த அறிவிப்பை இவ்விலாகா வெளியிட்டுள்ளது.

பதிவிலாகா அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பணியாற்றும் ராணுவ வீரர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மட்டுமே ஒருவரின் மை கார்டை பரிசோதிக்க முடியும் என்றும் மற்ற நபர்களிடம் மைகார்டைக் கொடுக்கக் கூடாதென்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

spot_img

latest articles

explore more