Homeகுற்றவியல்கோர விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து இழிவாக பதிவிட்ட ஆசிரியர்.

கோர விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து இழிவாக பதிவிட்ட ஆசிரியர்.

ஈப்போ, ஜூன் 12 —

கடந்த திங்கள்கிழமை கெரிக்கில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் – உப்சியின் 15 மாணவர்களைப் பற்றி இழிவாக பதிவிட்ட ஆசிரியர் குறித்து, முழுமையான அறிக்கையைத் தயாரிக்கும்படி பேராக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் வழிக்காட்டலுக்கு ஏற்ப, மாவட்ட கல்வி இலாகா, அந்த அறிக்கையை தயாரிக்க வேண்டுமென, மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு செயற்குழு தலைவர் கைருதின் அபு ஹனிபா வலியுறுத்தினார்.

விசாரணையில், சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பேஸ்புக் கணக்கின் உரிமையாளர், பேராக்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் என்பது தெரியவந்துள்ளது.

உப்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேர்ந்துள்ள துயரத்தை, அவர் இழிவுப்படுத்தியது வேதனையளிக்கின்றது.
அவரது அப்பதிவு வைரலானதும், மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள் இடைநிலைப்பள்ளி முதல்வரைத் தொடர்பு கொண்டு, அந்த ஆசிரியரின் அப்பதிவை நீக்குமாறு அறிவுறுத்தினர்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.10 மணியளவில் சரிபார்க்கப்பட்டபோது, அந்த பதிவு நீக்கப்பட்டிருந்ததாக கைருதின் கூறினார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மோசமான பதிவு, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனிடையே, அந்த ஆசிரியரின் அச்செயல் தொடர்பில் புகார் ஏதும் பெறப்படவில்லை என பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின், தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more