ஜோர்ஜ் டவுன், ஜூன் 11-ஓராண்டு காலமாக பினாங்கு ஜோர்ஜ் டவுன், ஜாலான் டாக்டர் வு லியென் தே எனுமிடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 நபர்கள் போலீஸாரின் உதவியுடன் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மூவரும் ஜன்னல் கதவின் கிரிலில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதில் ஆச்சேயைச் சேர்ந்த இந்தோனேசிய நபர் இந்தச் செய்தியைக் குடும்பத்திடம் அறிவித்த பின்னர் அவர்களைப் போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.
இது சம்பந்தமாக ஓர் அந்நிய நாட்டு மாது உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


